பல்கலைக்கழக மாணவியின் திடீர் மரணம் ; பொலிஸார் தீவிர விசாரணை
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திடீரென உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
21 வயதுடைய பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி தனது குடும்பத்தினருடன் காரில் அனுராதபுரத்திற்குப் புனித யாத்திரை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
புனித யாத்திரையை முடித்துக்கொண்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக அக்மீமன பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, மாணவிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று (26) அதிகாலை அவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் உயிரிழப்புக்கான துல்லியமான மருத்துவக் காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.