தமிழர் பகுதி படை முகாமில் இடம்பெற்ற சம்பவம் ; இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கேப்பாபிலவில் அமைந்துள்ள 59 ஆவது படைத் தலைமையத்தில் கைவிடப்பட்ட பகுதி ஒன்றில் தூண் இடிந்து வீழ்ந்ததில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த இராணுவ வீரார்கள் இராணுவத்தினரின் காவு வண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த இராணுவ அதிகாரி குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்த 34 அகவையுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன் முள்ளியவளை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.