மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி
கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (28) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
உடகம்பொலயிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தின் போது லொறி சாரதியும் மோட்டார் சைக்கிள் சாரதியும் படுகாயமடைந்துள்ள நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.