வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களில் ஒருவர் கைது
உரும்பிராயில் நேற்று இரவு 11:30 மணியளவில் வீடொன்றை உடைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற திருடர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 11:30 மணியளவில் உரும்பிராயில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர் KRM ரக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர். உடுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கோண்டாவில் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.