இலங்கையில் பட்டினியில் வாடும் ஒரு லட்சம் குடும்பங்கள் !
இலங்கையில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் நாளாந்தம் உணவை பெற்றுக் கொள்ள முடியாமல் பட்டினி கிடப்பதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் பேராசிரியர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.
மேலும் 75 ஆயிரம் குடும்பங்கள் நாளாந்தம் என்ன உணவை உட்கொள்வது என்ற நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது 40,000 பேர் சேலைன் மூலமாக போஷாக்கை பெற்றுக் கொள்வதாகவும் உணவு பாதுகாப்பு குழுவின் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு துரிதமாக தீர்வு பெற்றுக் கொடுக்காவிட்டால் இந்த நிலை மேலும் மோசமடையலாம் என பட்டகொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை நாட்டின் விவசாயத் துறையை முழுமையாக கட்டியெழுப்ப வருடாந்தம் 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.