லொத்தர் சீட்டு விற்பனை என்ற பெயரில் பெண் செய்த சம்பவம் ; நீண்டகாலம் அரங்கேற்றிய செயல் அம்பலம்
கண்டியில் லொத்தர் டிக்கட் விற்பனை செய்வது போல் காட்டிக் கொண்டு 'ஹெரோயின்' போதைப் பொருள் விற்பனை செய்யத பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி தலதா வீதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்திற்கு முன்னாள் மேற்படி லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்வது போல் நடித்து, ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் பொலீசாருக்குக் கிடைத்தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி பெண் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் மற்றும் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பெண் நீண்டகாலமாக தலதா வீதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரவித்தனர்.
இந்த போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய மற்றும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.