பாணந்துறை துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைது
பாணந்துறை ஹிரான பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவருக்கு காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொல்ல திட்டமிட்டதாகவும் குறித்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபரிடம் இருந்து 13 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர் ஹிரான பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதேநேரம் தமன, ஹிரான பொலிஸார் மற்றும் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.