நல்லூரானை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு ஏற்பட்ட நிலை; முகநூலில் வெளியான பதிவு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர்கந்தன் ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து குறிப்பிடப்பட்ட பக்தர்களுடன் வழிபாடுகளை நடத்த சுகாதார பிரிவினர் அனுமதி அளித்திருந்தனர்.
எனினும் அதிகமான பக்தர்கள் நல்லூரானை தரிசிக்க சென்றதால் பொலிஸாருக்கும் அவர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் முகநூல்வாசியொவர் பதிவிடுகையில்,
நல்லூர் கந்தனின் பூசைகளோ, திருவிழாக்களோ எக்காலத்திலும் இரத்து செய்யப்பட்ட வரலாறு கிடையாது. போர்க்காலங்களில் கூட வெளிக்கதவு பூட்டியிருக்க எத்தனையோ முறை பூசைகள், திருவிழாக்கள் நடந்திருக்கின்றது. இம்முறையும் அவர்கள் செய்தது சரியானது என்பதே எனது நிலைப்பாடு ஆகும்.
ஆனால் இதை வைத்து இந்துக்களை உசுப்பேத்தும் ஒரு கீழ்த்தரமான அரசியல் நடைபெறுகின்றது. கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே சட்டத்தை, மனித உரிமைகளை மீறியிருக்கின்றன.
அதற்கு காரணம் இப்படியான அவசர நிலைகளை மனதில் வைத்து சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. இப்பொழுது தேவையானது ஒரு இறுக்கமான கட்டுப்பாடேயொழிய மனித உரிமைகளோ அல்லது ஜனநாயக உரிமைகளோ அல்ல.
கடவுள் இருக்கின்றார், இல்லை என்பதற்கப்பால் பலரது மனவழுத்தத்தை குறைக்கும் ஒளடதமாகவே கோவில்களும் திருவிழாக்களும் இருப்பதாக நான் நம்புகின்றேன்.(இந்த வரி, கோவில்களே தேவையில்லை என்று கருத்து எழுதுபவர்களுக்காக சேர்த்துள்ளேன்) என பதிவிட்டுள்ளார்.
https://jvpnews.com/article/do-not-come-near-the-nallur-temple-1628845016