தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்ட ஐந்தறிவு ஜீவன்; நெகிழவைத்த சம்பவம்!
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு பரவிய தீயினால் சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்த விசாரணை பொலிஸாரால் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எரிந்த வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட அவர்களின் வளப்பு நாய் தற்போது பராமரித்தவர்கள் உயிரிழந்ததை நினைத்து கண்ணீர்விட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதோடு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளதோடு, விபத்து நடந்த இடத்திலிருந்து அது இதுவரை செல்லவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது எஜமானர்களின் உயிரிழப்பால் கண்ணீர் விட்ட அந்த நாயின் செயல் பிரதேசவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
தொடர்புடைய செய்தி
இலங்கையில் இடம் பெற்ற பதற வைக்கும் சம்பவம்! குழந்தைகள் உட்பட உடல் கருகி பலியான ஐந்து தமிழர்கள்