இலங்கையில் இடம் பெற்ற பதற வைக்கும் சம்பவம்! குழந்தைகள் உட்பட உடல் கருகி பலியான ஐந்து தமிழர்கள்
நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் குழந்தைகள் உட்பட ஐவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது. அத்துடன் இந்த அனர்த்தத்தில், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, இத்தீப்பரவல் இடம்பெற்ற போது, குறித்த வீட்டிலிருந்த 35 வயது மகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவயது சிறுவனுக்கு நேற்று (07) முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
