யாழில் திடீர் சோதனையில் இறங்கிய அதிகாரிகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இன்று 24) சுகாதார பரிசோதனை அதிகரிகளால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
28 உணவகங்கள் மற்றும் இதர வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக 28 வர்த்தக நிலையங்களில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 11 கடைகளில் குறைபாடுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த வர்த்தக நிலையங்களில் வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த 9 வகையான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன. நான்கு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பேரில், சுகாதார வைத்திய அதிகாரி, தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி, தாய்சேய் நல வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.