கோட்டாபய தொடர்பில் உண்மையை மறைக்கும் அதிகாரிகள்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், குறித்த ஹோட்டலின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.
நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய மாலைதீவுக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் அவரது விசாகாலம் நிறைவடைந்தத்தால் தற்போது தாய்லாந்திற்கு சென்றுள்ளார்.
தாய்லாந்தில் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி குறித்த ஹோட்டலின் பெயர் வெளியிடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு நிமித்தம் தாய்லாந்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கோட்டாபய, ஹோட்டலில் இருந்து வெளியேறவேண்டாம் என அந்த நாட்டு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.