நாடளாவிய ரீதியில் நாளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
தமது பிரச்சினைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரை அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.