வாய் திறக்க வேண்டாம் ;ஆளும் கட்சி பெண் எம்பிக்கு உத்தரவு!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெசல்வத்தல கிம்பத பகுதியில் நடந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு பதிலளித்த நிலந்தி கொட்டஹச்சி,
என்னால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது
மன்னிக்கவும்.ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், என்னால் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
அண்மையில் எம்பி நிலந்தி கொட்டஹச்சி , ஊடகங்களுக்கு தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவ்ல்கள் கூறுகின்றன.