நிலநடுக்கங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
நாட்டில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கங்கள் தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ளத்தேவை இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் அமைந்துள்ள இந்திய - அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில் நேற்று பிற்பகல் (18-03-2023) முழுவதும் பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டிருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஸ்ட புவியியலாளர் தனுஸ்க ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
நில அளவீட்டுக் கருவிகளில் இந்த 4 அதிர்வுகளும் பதிவாகியிருந்ததாகவும் ஆனால் பொதுமக்கள் இது தொடர்பாக எந்த முறைப்பாடுகளையும் பதிவு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைக்கும் இடையிலான எல்லையில் 4 மற்றும் 5 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டிருந்தன.
அந்த நிலநடுக்கங்களின் போது வெளியாகும் ஆற்றல் இலங்கை ஊடாக வெளிவருவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.
மக்களுக்கு தேவையற்ற அச்சம் வேண்டாம். திருகோணமலை, கோமரன்கடவல பிரதேசம் மற்றும் கிரிந்த, பலதுபான கடற்பகுதியில் இரண்டு சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இது 3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சிறிய நிலநடுக்கம் என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கோமரன்கட பிரதேசவாசிகள் அதிர்ச்சியை உணர்ந்துள்ளனர்.
இதேவேளை, நேற்று மாலை 06.46 மணியளவில் கிரிந்த - பலதுபான கடற்கரையை அண்மித்த பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் அளவு ரிக்டர் அளவு 2.6 ஆக பதிவாகியிருந்தது.
இதேவேளை கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் ரிக்டர் அளவுகோலில் 4ற்கும் குறைவான அதிர்வுகளே ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெரிய நிலநடுக்கங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் 2, 2.5, 3, 3.5 போன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்திலும் ஏற்படலாம்நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கங்களுக்கு மேலதிகமாக, பெப்ரவரி 10ஆம் திகதி முதல் நாட்டில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
மொனராகலை, புத்தல, வெல்லவாய, கும்புக்கன மற்றும் ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.