வாகன இலக்கத் தகடுகளை பெறாத உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வராததால், திணைக்களத்தின் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலக்கத் தகடுகள் கொழும்பு தலைமை அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

அசௌகரியங்கள்
இந்த பாரிய அளவிலான தகடுகள் அடுக்கப்பட்டிருப்பதால், திணைக்களப் பணியாளர்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
அதேவேளை ஏனைய மாகாணங்களுக்கு சுமார் 1,46,712 இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இத்தகைய பின்னணியில் வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தமக்குரிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.