வட மாகாண பேருந்து தரிப்பிடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் வெளியான தகவல்
வடமாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை வழங்கி அரசாங்கம் சேவையை வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அறிவூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மானியத் திட்டங்கள்
வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை பெறுகின்றமை குறைவானதாகவே காணப்படுகின்றது.
இதற்காக அரசாங்கம் ரூபா 4,000 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் இவ்வாறான மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாகும் இவை தொடர்பில் பூரண தெளிவுகளை வழங்கும் நோக்கில் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன இவற்றை எமது எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.