திருகோணமலை - மட்டக்களப்பு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
திருகோணமலை - மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் பகல் வேளைகளில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறும் எனத் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் மின்னேரியா - ரொட்டவௌ பகுதியில் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை எரிபொருள் கொண்டு சென்ற ரயில் மோதி 2 யானைகள் உயிரிழந்தன.
இதன்போது, ரயில் மார்க்கத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மட்டக்களப்பு - கொழும்பு ரயில் மார்க்கத்தில் சகல ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.
இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த ரயில் மார்க்கம் பாதுகாப்பற்றது எனவும், அதனூடாக பயணிப்பது பொருத்தமற்றது எனவும் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இவ்வாறான நிலையில், குறித்த மார்க்கத்தினூடாக பகல் வேளைகளில் மாத்திரமே ரயில் பயணிக்கும் எனத் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.