பூமியிலிருந்து அதிக தூரம் சென்ற மனிதர்கள் ; மனிதகுல வரலாற்றில் புதிய உச்சம்!
நாசா (NASA) அமைப்பின் Artemis II விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்கள், சற்று நேரத்திற்கு முன்னர் மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்தவர்கள் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
இதன் மூலம், கடந்த 1970 ஆம் ஆண்டு Apollo 13 விண்கலத்தின் மூலம் விண்வெளி வீரர்கள் நிலைநாட்டியிருந்த சாதனையை இந்த குழுவினர் முறியடித்துள்ளனர்.

Apollo யுகத்திற்குப் பிறகு சந்திரனைச் சுற்றி பயணம் செய்யும் நாசாவின் முதலாவது விண்வெளி ஆய்வுத் திட்டம் இதுவாகும்.
மனிதர்களை மீண்டும் சந்திரனின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னதாக, விண்கலத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் விண்வெளி வீரர்களின் செயற்பாடுகளைப் பரிசோதிப்பதற்காகவே இந்த Artemis II திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.