கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் இன்றைய அவல நிலை...
கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி மாசு படிந்த நிலையில் உள்ளதால் மேலும், ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்கள் காணப்பட்டு வருகின்றமையால் டெங்கு பரவும் சூழ்நிலை நிலவி வருகின்றன.
இதேவேளை, கிளிநொச்சி பேருந்து தரிப்பிடம் தொடர்பாக மலசல கூடத்தின் கழிவுநீர் பயணிகள் பாவனையில் உள்ள இடங்களில் வெளியேறுதல் மற்றும் தரிப்பிட வளாகம் மிகவும் அசுத்தமாக காணப்படுவது தொடர்பில் பலமுறை தெரியப்படுத்திய போதும் அதிகாரிகள் மிகவும் அசம்மந்தப் போக்கை காணப்படுகின்றனர்.
குறித்த பேருந்து நிலையம் வட மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
தென்பகுதியில் இருந்து வருகின்ற யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் இவ் பேருந்து நிலையமே மத்தியில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பேருந்து நிலையத்திற்கு நாளாந்தம் 1000 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றன.
இவ்வாறான நிலையில் குறித்த பேருந்து நிலையம் இவ்வாறு அசுத்தமற்ற நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.