2026 சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாதது ஒரு தடையாக இருக்காது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் சமர்ப்பிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பரீட்சை விண்ணப்பங்கள்
2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஜூலை 3 முதல் 23ஆம் திகதி வரை இணையவழி மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது, உத்தியோகபூர்வ பரீட்சை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி எந்தச் சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்கள் அல்லது விளக்கங்களுக்கு, 1911 என்ற அவசர உதவி இலக்கம் அல்லது 011-2784537, 011-2786616, 011-2784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும், 011-2784422 என்ற தொலைநகல் இலக்கம் மூலமாகவும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளலாம்.