தென்னிந்திய பிரபல ரெப் பாடகர் கைது ; தமிழக முதல்வர் விஜய் செய்த செயல்
தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

கடும் கண்டனம்
பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருவருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.
ரெப் பாடகர் "அறிவு" கைது செய்யப்பட்டமைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.