வடக்கில் தொடரும் அபாய நிலை! மேலும் மூவருக்கு உறுதி
வடக்கில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீடம் ஆகிய ஆய்வு கூடங்களில் இன்று (17-12-2021) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் - ஒருவர் (45 வயது பெண்)
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒரு நாள் (70 வயது ஆண்)
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர் (57 வயது ஆண்)
ஆகிய மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது