அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை ; PayPal தடைகளை நீக்க நடவடிக்கை

Central Bank of Sri Lanka Sri Lanka GovPay
By Sahana Feb 26, 2026 05:59 AM GMT
Sahana

Sahana

Report

இலங்கைக்கு PayPal வசதியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வை மற்றும் கொடுப்பனவு பிரிவுகளிடம் இது குறித்து வினவிய போது, உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை ; PayPal தடைகளை நீக்க நடவடிக்கை | No Official Announcement Paypal Steps Lift Restric

எனினும், இலங்கையிலுள்ள சில தனியார் வங்கிகள் PayPal தாய் நிறுவனத்துடன் இணைந்து, இதுவரையில் நடைமுறையில் இருந்த தடைகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

"Inward Remittance" எனப்படும் இலங்கைக்கு வெளிநாட்டுப் பணத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட தடைகளைத் தளர்த்துவதற்கான முயற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் முறையான PayPal வசதி இல்லாத காரணத்தினால், இணையவழியில் தொழில் செய்யும் பல உள்ளூர் முயற்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் போலி முகவரிகளையோ அல்லது வௌிநாடுகளில் உள்ள நண்பர்களின் முகவரிகளையோ பயன்படுத்தி கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு செலாவணி பெருமளவில் இழக்கப்படுவதாக செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த வசதி முறையாக அறிமுகப்படுத்தப்பட்டால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: இணையவழியில் வர்த்தகம் செய்வோர் தமது வருமானத்தை முறையான வழியில் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை தொடர்பில் வெளியான புதிய அறிக்கை

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை தொடர்பில் வெளியான புதிய அறிக்கை

அத்தோடு, சாதாரண நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தமது கொடுக்கல் வாங்கல்களை விரைவாக மேற்கொள்ள வழிவகுக்கும்.

முறையற்ற பணப்பரிமாற்ற முறைகளான உண்டியல் போன்றவை தவிர்ந்து, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிப்படையான கட்டமைப்புக்குள் நிதி நடவடிக்கைகள் இடம்பெறும்.

மேலும், இதன் மூலம் வரி வருமானங்களைக் கணக்கிடுவதில் அரசாங்கத்திற்கும் சாதகமான சூழல் ஏற்படும்.

இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறை விதிகளுக்கு அமைய இந்த வசதி நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அது வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரும் வசதியாக அமையும் என செயலாளர் வருண ஸ்ரீ தனபால மேலும் தெரிவித்தார்.

கொழும்பு குப்பைமேட்டில் தீப்பரவல் ; அணைக்க இரு தீயணைப்பு வாகனங்கள் விரைவு

கொழும்பு குப்பைமேட்டில் தீப்பரவல் ; அணைக்க இரு தீயணைப்பு வாகனங்கள் விரைவு

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US