நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
நீர்கொழும்பு சிறைசாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் கிடைத்தன.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தந்தைக்கும் தாயுள்ளம்; ஸ்பெயின் கால்பந்து வீரர் குகுரெல்லாவின் சுருள் முடிக்குப் பின் இப்படி ஒரு கதையா!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தில், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.