AI அச்சத்தால் சமூக வலைதளங்களில் இருந்து விலகும் முன்னணி நடிகைகள்!
சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக பிரபல நடிகைகள், சமூக வலைதளங்களில் இருந்து விலகி வருகின்றமை பேசுபொருளாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிழற்படம் தவறாக மாற்றப்பட்டு பரப்பப்படுவது, அவதூறு கருத்துகள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் ஆகியவை தங்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிப்பதாக நடிகைகள் குறிப்பிடுகின்றனர்.

தனிநபர் தாக்குதல்கள் , வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள்
அந்தவகையில், ஜன நாயகன் பட நடிகை மமிதா பைஜு, சமூக வலைதளங்கள் தனது திரைப்பயணத்திற்கு முக்கியமானவை என்பதை அறிந்திருந்தாலும், அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இனி தனது திரைப்படங்கள் மற்றும் தொழில் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தனது நிர்வாகக் குழுவே ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இதயம் முரளி' பட நடிகை கயாடு லோஹரும் மன அமைதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.
ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் முக்கிய கருவியாக இருந்து வரும் நிலையில் முன்னனி நடிகைகள் இவ்வாறு விலகி வருவது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது