மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ மின்சாரக் கட்டணம் தொடர்பில் மின்சார சபையிடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் மின் கட்டண திருத்தம் 06 மாதங்களுக்கு ஒரு முறையாக வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்சார பாவனையாளர் சங்கம் நேற்று (04.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை பாவனைகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை திருத்துமாறு இந்த வருடத்தில் மூன்றாவது தடவையாக கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வருடம் மின் கட்டண திருத்தம் இடம்பெறாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.