தமிழ், சிங்கள புத்தாண்டு ; தின்பண்டங்களின் உற்பத்தி செலவு தொடர்பில் வெளியான அறிக்கை
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான பலகாரம், இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவு 7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இது 2019 ஆம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று வெரிட்டே ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதங்களுக்கு இடையில், பலகாரம், இனிப்பு தின்பண்டங்களுக்கான மூலப்பொருட்களின் விலையில் 7 சதவீத அதிகரிப்பு இருப்பதாகப் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யின் விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணமாகும். 2024 ஆம் ஆண்டில், தின்பண்டங்களுக்கான மூலப்பொருட்களின் விலை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.2 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டில், இது 2019 ஆம் ஆண்டிலிருந்த விலையைவிட 2.4 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.