வீடொன்றை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை; ரகசிய தகவலால் சிக்கிய கொள்ளையன்
மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடிய தங்க ஆபரணங்களை அடகு
சந்தேகநபர் மீகொடை, புவக்வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 4 தங்க மாலைகள், 3 தங்க மோதிரங்கள், ஒரு ஐம்பொன் பஞ்சாயுதம், ஒரு பதக்கம் மற்றும் 18,770 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபரணங்களை அடகு வைத்ததற்கான 3 பற்றுச்சீட்டுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.