புத்தாண்டு முதல் கொட்டி கொடுக்க போகும் புதன் பகவான்.! இந்த ராசிகாரர்களின் காட்டில் பணமழை
2026-ஆம் ஆண்டு பிறக்கப்போகும் வேளையில், கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் பகவான் தனது நிலையை மாற்றுவதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்களை அள்ளி வழங்கப் போகிறார்.
ஜோதிட சாஸ்திரப்படி புதன் பகவான் அறிவு, வணிகம், பேச்சுத்திறன் மற்றும் தனவரவுக்கு காரணியாக விளங்குபவர். அவர் அருள் பெருகும்போது, தடைபட்ட காரியங்கள் யாவும் கைகூடும்.

புத்தாண்டில் விஸ்வரூப வளர்ச்சி
மேஷம்: தொழிலில் விஸ்வரூப வளர்ச்சி புத்தாண்டு பிறந்ததுமே மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் புதிய பாதைகளைத் திறந்து விடுவார். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த நிதி நெருக்கடிகள் நீங்கி, வருமானம் பல மடங்காக உயரும். குறிப்பாக, கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்: புத்திசாலித்தனமான முதலீடுகள் மிதுன ராசிக்கு அதிபதியே புதன் என்பதால், இந்த புத்தாண்டு உங்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது. உங்கள் பேச்சாற்றலால் பெரிய ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். இழந்த செல்வாக்கையும், பணத்தையும் மீண்டும் மீெடுக்கும் "விட்டதை பிடிக்கும்" நேரம் இது. பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்குப் பணமழை நிச்சயம்.

கன்னி: உத்தியோகத்தில் உயர்வு மற்றும் பணப்பொழிவு கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி உத்தியோகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் அதிக லாபம் ஈட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்த பணக்கஷ்டங்கள் மறைந்து, சேமிப்பு அதிகரிக்கத் தொடங்கும். கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும்.

தனுசு: அதிர்ஷ்டக் காற்று வீசும் காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் யோகமான இடத்தைப் பிடிப்பதால், தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரக்கூடும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கு இதுவே சரியான தருணம். பணவரவு சீராக இருப்பதால் மனமகிழ்ச்சியும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் தடையின்றி நடக்கும்.
