ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான புதிய நேரக்கட்டுப்பாடுகள் ; பொலிஸ் தலைமையகம் விசேட அறிவித்தல்
பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால அவகாசங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகம் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

வாரத்தின் நாட்களைப் பொறுத்து இந்த நேரக் கட்டுப்பாடுகள் மாறுபடுகின்றன.
இதன்படி, திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10:00 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1:00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:30 மணி வரையும் அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைமையகம் எச்சரித்துள்ளது.