முதுமையிலும் இளமை மாறாத அன்பு ; 75 வயது முதியவர் மனைவியை காப்பாற்ற நிகழ்த்திய அற்புத பயணம்
இந்தியாவின் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது பாபு லோஹர் தனது மனைவி ஜோதியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அற்புதமான உதாரணமாக மாறியுள்ளார்.
பீகாரின் ‘மலை மனிதன்’ தசரத் மாஞ்சியைப் போலவே, பாபு லோஹரும் தனது துணையின் உயிருக்காக மாபெரும் போராட்டம் மேற்கொண்டுள்ளார். சம்பவம், அவரது மனைவி ஜோதிக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு, அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது தொடங்கியது.
மருத்துவர்கள் அவரை 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாக கூறினர். ஆனால் தனியார் நோயாளர் காவு வண்டிக்கு தேவையான பணம் பாபுவிடம் இல்லை.

அதில் மனமுடைந்து அவர் மனதை மாற்றவில்லை. பாபு தனது பழைய மிதிவண்டி ரிக்ஷாவையே நோயாளர் காவு வண்டியாக மாற்றி, அதில் மனைவியுடன் சென்று காப்பாற்றும் துணிச்சலை காட்டினார்.
மெத்தை மற்றும் பராமரிப்பு பொருட்களைச் சேர்த்து, சுடும் வெயில், உடல் சோர்வு எதையும் கவனிக்காமல், பாபு ஒன்பது நாட்கள் ரிக்ஷாவை மிதித்து பயணம் செய்தார்.
இரவு நேரங்களில் சாலையோரக் கடைகளில் தங்கிய அவர், ஒரே எண்ணமே மனதில் இருந்தது: “என் மனைவியைக் காப்பாற்ற வேண்டும்”. பாபு லோஹரின் அர்ப்பணிப்பு வெற்றியடைந்தது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட ஜோதி இரண்டு மாதங்கள் பின்னர் ஓரளவு குணமடைந்தார். ஆனால் ஜனவரி 19 அன்று வீட்டிற்கு திரும்பும் வழியில் ஒரு வாகனம் மோதி ரிக்ஷா கவிழ்ந்தது; ஜோதி மீண்டும் காயமடைந்தார்.
இதனால் மனமுடைந்த பாபு தளரவில்லை. மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை மற்றும் ஊர்ச் செல்லும் பண உதவியையும் வழங்கினர்.
அவருடைய “எங்களுக்கு வேறு யாருமில்லை; ஒருவருக்கொருவர் நாங்கள்தான் உலகம்” என்ற வார்த்தைகள், இன்றைய காலத்துக் காதலர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடமாகும் என மருத்துவர் விகாஸ் தெரிவித்தார்.
பாபு லோஹர் மற்றும் அவரது மனைவி ஜோதியின் கதையால் அன்பின் சக்தி, உறுதி, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உண்மையான மதிப்பு அனைவருக்கும் புரிந்துவந்துள்ளது.