அரச வாகனங்களுக்கு புதிய விதிகள் ; வெளியான புதிய சுற்றறிக்கை
அரச வாகனங்களின் பராமரிப்பை முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையானது அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. வாகனத்தின் எரிபொருள் பாவனைத் திறன் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும்.
இதேவேளை ஒவ்வொரு 25,000 கிலோமீற்றர் பயணத்திற்குப் பிறகு அல்லது இயந்திரப் பழுதுபார்ப்பிற்குப் பிறகு கட்டாயம் சோதிக்கப்பட வேண்டும்.

எரிபொருள் பாவனையில் திடீர் மாற்றம் கண்டறியப்பட்டால், அது இயந்திரக் கோளாறா அல்லது ஊழல் நடவடிக்கையா என்பதை உறுதிப்படுத்த வாகனங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வாகனங்களின் பயணப் பதிவேடுகளை முறையாகப் புதுப்பிப்பதற்கும் அவற்றை ஆய்வு செய்வதற்கும் புதிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நடைமுறை மூலம் அரச வாகனங்களின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும், எரிபொருள் முறைகேடுகளைத் தடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.