வேகம் அதிகம்...பாதிப்பு குறைவு: ஒமிக்ரோன் தொடர்பில் புதிய தகவல்
கொரோனாவின் டெல்டா வைரஸை விட தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரோன் தொற்று 70 சதவீதம் வேகமாக பரவும் என்றும் , ஆனால் பாதிப்பு குறைவாக இருக்கும் என்றும் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்ட 24 மணித்தியாலத்தில் அது நுரையீரலை தாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மைக்கல் சேன் சி வாய் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஒமிக்ரோன் வேகமாகப் பரவி நுரையீரலுக்குள் சென்றாலும் கூட அது நுரையீரல் திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்துவது என்பது டெல்டாவை விட 10 மடங்கு குறைவு எனக் கண்டறிந்துள்ளனர்.
ஆகையால் ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு ஒமிக்ரோன் பரவும் வேகம் மற்ற உருமாறிய வைரஸ்களைவிட 70 மடங்கு அதிகம் என்றாலும் கூட அது நோய் பாதிப்பு ஏற்படுத்தும் தீவிரம் ஒப்பீட்டு அளவில் மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த ஒமிக்ரோன் தொற்றானது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையில் ஒமிக்ரோன் தொற்றானது 77 நாடுகளுக்கு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.