ரணிலுக்கு எதிராக புதிய விசாரணைாகள் ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் சமீபத்திய அல் ஜசீரா நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இதன் போது பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி மோசடி
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் நடந்தவை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகவும், அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.