உபுல் தரங்க தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு!
இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய தெரிவுக்குழுவை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (04-12-2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர்,
புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க தலைமை தாங்குவார் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குழுவின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய தெரிவுக்குழு எப்போது நியமிக்கப்படும் என்பது தொடர்பில் பெர்னாண்டோ தெரிவிக்கவில்லை.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரமோத்ய விக்ரமசிங்க பணியாற்றுகிறார்.