வெறிச்சோடிய அரங்கில் தனியாக உரையாற்றிய நெதன்யாகு ; பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம்
பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான இங்கிலாந்து மற்றும் பிரான்சின் முடிவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை முழுமையான பயனற்ற செயல் என குறிப்பிட்ட அவர் இது ஒரு பைத்தியக்கார செயல் எனக் கூறினார்.
மேலும் அந்த நாடுகளின் முடிவுகள் இஸ்ரேலுக்கு " தேசிய தற்கொலை" என சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்படுகொலை குற்றச்சாட்டுகள்
இஸ்ரேல் "வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைக்கிறது" என்ற குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டார். இஸ்ரேல் மீது சுமத்தப்பட்ட இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் நெதன்யாகு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் உரையாற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற அழைக்கப்பட்ட போது, அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறியதோடு, பலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பிரதிநிதிகள் யாருமற்ற நிலையில் வெறிச்சோடிய ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் நெதன்யாகு உரையாற்றியுள்ளார்.