நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 1200 கைதிகளிடம் வாக்குமூலம்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகள்
விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புக்கள் கவலைக்குரியது.
கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த சம்பவம் அவ்வாறானதல்ல, போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும்.
போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெறாமல் இருப்பதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.