மஹாபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிதியம், குறித்த கொடுப்பனவிற்கான இறுதித் தெரிவுப் பட்டியல்கள் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இணையவழி பதிவு
அதற்கமைய, அப்பட்டியலில் பெயர்கள் அடங்கியுள்ள மாணவர்கள் ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர் https://mahapola.lk/BankApp2025/ என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழி பதிவை நிறைவு செய்ய வேண்டும்.
2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்குத் தெரிவுசெய்யப்படாத மாணவர்களின் மேல்முறையீடுகள் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய பல்கலைக்கழகங்கள் ஊடாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.