நாமல் ராஜபக்ஷவின் பரிதாப நிலை! கூட்டத்தை புறக்கணித்த மொட்டு எம்பிக்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பலப்படுத்துவதற்காக நாமல் ராஜபக்சவும் ஜோன்சன் பெர்னாண்டோவும் களத்தில் குதித்துள்ளனர்.
இதற்காக அவர்கள் மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் அந்தந்த மாவட்டங்களின் எம்.பிக்களே அந்தக் கூட்டங்களைப் புறக்கணிப்பதுதான்.
தனித்து விடப்பட்ட நாமல்
மாத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனக பண்டார, பிரமித்த பண்டார, ரோஹன திஸாநாயக்க ஆகிய எம்.பிக்கள் கலந்துகொள்ளவில்லை.
அதோடு அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும் கம்பஹா மாவட்டத்துக்கான கூட்டம் பியகமவில் இடம்பெற்றபோது கட்சியின் மாவட்டத் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
You My Like This Video