திருமணத்திற்குப் புறம்பான உறவு; ஆடைகளைக் களைந்து வீதியில் இழுத்து சென்ற கணவன்
திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகச் சந்தேகித்த ஒரு கணவர், தனது மனைவியையும் அவரது நண்பரையும் செருப்பு மாலை அணிவித்து, கொடூரமாக அவமானப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆடைகளைக் களைந்து வீடியோ
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புரி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பள்ளி ஆசிரியை, தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகளாகத் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அவரது கணவர் தனது நண்பருடன் சேர்ந்து, ஆசிரியை தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அப்போது, அந்த ஆசிரியை வேறொரு ஆண் நண்பருடன் இருப்பதைப் பார்த்த கணவர் ஆத்திரமடைந்து, இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். தாக்கியதோடு நிற்காமல், அந்த இருவரையும் நடுவீதியில் இழுத்துச் சென்றுள்ளனர்.
செருப்பு மாலை அணிவித்து, அவர்களது ஆடைகளைக் களைந்து, அனைவர் முன்பும் அவமானப்படுத்தி வீடியோவும் எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        