எல்ல பஸ் விபத்தில் காயமடைந்த பெண் ஊழியர் உயிரிழப்பு
எல்ல - வெல்லவாய பிரதான வீதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் இன்று (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்காலை நகர சபையில் கடமையாற்றிய 41 வயதுடைய பெண் ஊழியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16
செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு எல்ல - வெல்லவாய பிரதான வீதியில்இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் தங்காலை நகர சபையில் கடமையாற்றிய 12 ஊழியர்களும் அடங்குகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் இன்று உயிரிழந்துள்ளார்.
அதன்படி, எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.