சிறையில் நாமல் ராஜபக்ச; அச்சத்தில் தாயும்....தாரமும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற ஊழலில் நாமல் ராஜபக்ச கைதாகியுள்ளார். இன்னிலையில் நாமலி கைது அவரது மனைவியை பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் அச்சத்தில் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய அரசியல் முகமாகத் திகழும் நாமல் ராஜபக்சவின் இந்தத் திடீர் கைது நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.