கூட்டமைப்பு உறுப்பினர்களுக்காக குரல் கொடுத்த அமைச்சர் நாமல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் (எம்.எ சுமந்திரன்) மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோருக்கு ஆதரவாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குரல் கொடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டம் நடாத்தியிருந்தனர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருந்த போது கனடாவில் உள்ள புலம்பெயர் சமூகத்தினர் அவர்களை நடாத்திய விதம் கவலையளிக்கின்றது என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
Sad to see diaspora groups treating #lka MPs in such a manner when they go in for dialogue. Hope diaspora realize that dialogue & unity is only way forward & not division of a country. It's recommended that all parties come together on the same table & hold healthy discussions.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 21, 2021
ஐக்கியம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய வழிகளின் மூலமே நாடு முன்னோக்கி நகர முடியும் என்பதனை புலம்பெயர் சமூகங்கள் புரிந்து கொள்ளும் என நம்புவதாக நாமல் தெரிவித்துள்ளார். பிரிவிணையின் ஊடாக எதனையும் அடைய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பி ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடாத்துவதே சிறந்தது என்பது தமது நிலைப்பாடாகும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) டுவிற்றர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.