யாழ் நல்லூர் பிரதேச சபை பிறப்பித்த அதிரடி உத்தரவு ; நாளை முதல் கட்டாயமாகும் நடைமுறை
மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லூர் பிரதேச சபை
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்குள் அகற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலுக்கு ஏற்ப மேற்படி இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை குடியிருப்பாளர்கள் அகற்றப்படாவிடின் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து எவ்வித முன்அறிவித்தலுமின்றி நல்லூர் பிரதேச சபை அவற்றினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கன் குறிப்பிடப்பட்டுள்ளது.
