குரு - புதன் உருவாக்கும் ராஜயோகம் ; டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்
Horoscope
Astrology
Hinduism
By Sahana
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். வேத ஜோதிடத்தின் படி, புதனும் குருவும் ஏப்ரல் 03 ஆம் திகதி ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து, நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது புதன் குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் பார்ப்போம்.
| துலாம் | துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குருவும், 5 ஆவது வீட்டில் புதனும் இருந்து, நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். பணியிடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் இலக்கை அடைவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வருமானத்தில் எதிர்பாராத உயர்வு ஏற்படும். |
| கடகம் | கடக ராசியின் 12 ஆவது வீட்டில் குருவும், 8 ஆவது வீட்டில் புதனும் இருந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, அவரது உடல்நலம் மேம்படும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். |
| மீனம் | மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குருவும், 12 ஆவது வீட்டில் புதனும் இருந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் பெற்றோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். வேலைகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US