வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் ; நேரடி ஒளிபரப்பு!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இந் நிலையில், நேற்றைய தினம் (28) , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது.
இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசாமியாரின் வருடாந்த பெரும் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு யாழ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நல்லூர் கதனின் அருளை பெற உள்ல்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.