யாழில் பெண் கொலையில் நீடிக்கும் மர்மம்; சந்தேக நபர்கள் பிடிபடாதது ஏன்?
யாழ் வடமராட்சி தாளையடிப் பகுதியில் ஜெயசீலன் சங்கீதா எனும் 44 வயதான 3 பிள்ளைகளின் தாயார் வல்லுறவுக்குள்ளான நிலையில் வீட்டின் மலசலகூடத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இதுவரை சந்தேக நபர்கள் பிடிபடவில்லை.
உயிரிழந்த பெண் மலசலகூடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நீர் நிரம்பிய பரல் ஒன்றில் தலை மூழ்கிய நிலையில் இறந்து காணப்பட்டார்.
நீர் நிரம்பிய பரல் ஒன்றில் தலை மூழ்கிய நிலையில் சடலம்
கணவன் மீன்பிடிக்கச் சென்று அதிகாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது மனைவியைக் காணாமல் தேடியபோதே வீட்டின் மலசலகூடத்தின் அருகில் மனைவி சடலமாக காணப்பட்டார்.
அவரது மரணம் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் குறித்த வீட்டில் களவு ஏதாவது நடந்துள்ளதா என்பதையும் ஆராய்ந்துள்ளனர்.
பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன் பெண்ணின் பெண் உறுப்பின் அருகில் நகக் கீறல்கள் காணப்பட்டுள்ளது. குறித்த கொலை ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் கருதுகின்றார்கள்.
குறித்த பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டு 3 நாட்களாகியும் இன்னும் சந்தேகநபர்கள் பிடிபடவில்லை என்பது மக்களிஞ் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.