தமிழர் பகுதியொன்றில் விபத்தை ஏற்படுத்திய மாயமான வாகனம் ; பலியான பாதசாரி
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் – புன்னக்குடா வீதியின் 2 ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் வாகனம் ஒன்று, பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்கு காரணமான வாகனம் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.