அதிபரை அலறவிட்ட மர்ம நபர்கள் ; பாடசாலைக்குள் மரண பீதியில் உறைந்த மக்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மேல்நிலை பள்ளியில், தலைமை ஆசிரியர் அறை முன்பு முட்டை வைத்து மாந்திரீக பூஜை நடத்திய சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.
மஞ்சள், குங்குமம் பூசி மரக்கட்டை பொம்மை வைத்து, மலர் மாலை போட்டு அலற விட்ட சம்பவத்தை அரங்கேற்றியது யார் என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

போலி மாந்திரீக பூஜை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறிய சம்பவம்தான் இது. தலைமை ஆசிரியர் அறையின் முன்பாக மாந்திரீக கட்டம் வரைந்து மர்ம இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
மஞ்சள், குங்குமம் தூவி கட்டத்தின் நடுவே சூனிய பொம்மை படுக்க போட்டு அதனருகே முட்டை வைத்து மாந்திரீக பூஜை நடத்தி உள்ளனர். மேலும் தலைமை ஆசிரியரின் அறை கதவில் மலர் மாலை மாட்டி அலற விட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் இல்லா நள்ளிரவில் இது போன்று அசம்பாவிதத்தில் ஈடுபட்டவர்கள், மறுநாள் விடிந்ததும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரண பீதியைக் காட்டியுள்ளனர். பள்ளிக்கூடத்திற்கு பில்லு சூனியம் வைத்து விட்டார்கள் என்ற அச்சத்தில் பெற்றோர்கள், மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துப் பூட்டினர்.
இது குறித்து ஓமலூரில் பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், போலி மாந்திரீக பூஜையை செய்து மரணம் பயத்தைக் காட்டிய ராக்கோழிகளுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.